மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அடுத்தவாரம் பிரித்தானியா, இந்தியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு  அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மகிந்தவை சித்திரவதை செய்யும் விளையாட்டு செயலி – கூகுளில் அறிமுகம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை சித்திரவதை செய்யும், அன்ட்ரொயிட் விளையாட்டு செயலி ஒன்று, கூகுளில் அறிமுகமாகியிருக்கிறது.

பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா படைத் தளபதிகளுடன் பேச்சு

சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தலையில் படுகாயங்களுடன் மேஜர் ஜெனரல் மானவடு கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியான, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை நிராகரித்தது மேல் மாகாணசபை

வடக்கு-கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்து, சமஸ்டி ஆட்சி அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரி, வடக்கு மாகாணசபையில் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்தை, மேல்மாகாணசபை நிராகரித்துள்ளது.

கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் அரசின் உள்வீட்டு வேலை – சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து, கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒரு உள்வீட்டு வேலை என்றும், ராஜபக்ச குடும்பம் அனுதாப உணர்வை வெற்றி கொள்வதற்காகவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்ஹெமுக்கு ஐ.நா உதவிச்செயலர் பதவி

சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், ஐ.நாவின் உதவிச் செயலராக நியமிக்கப்படவுள்ளார்.

மைத்திரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இம்மாத நடுப்பகுதியில் இந்தியா வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – விரைவில் சீனாவுடன் உடன்பாடு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக,  சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று,  சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண  அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு நிதியளித்த சீன நிறுவனம் மீது வழக்கு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு நிதியளித்ததாக சீன நிறுவனத்தின் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளது.