மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய  அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

ஜப்பான்- சிறிலங்கா  பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து சீனாவுடன் பேசவில்லை – பீரிஸ்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சீனாவுடன் கூட்டு எதிரணி பேச்சு நடத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தியே என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.

ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு சிறிலங்கா அழைப்பு

அடுத்த ஆண்டு ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்புகளை விடுத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு எதிராக ஊடகவியலாளர் முறைப்பாடு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி தம்மைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான், சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அமெரிக்காவுக்குப் பறந்தார் பசில் ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஊடகவியலாளரை அச்சுறுத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி – விளக்கம் கோரினார் பாதுகாப்புச்செயலர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.