மேலும்

சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா

சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றையும், இறப்பர் கைத்தொழில் வலயம் ஒன்றையும், அமைப்பதில் சீன அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது.

சீனாவின் ஹய்னான் இறப்பர் அபிவிருத்தி வலயத்தில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினர், இது தொடர்பாக சிறிலங்காவின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்கவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சீன குழுவுக்கு,  ஹய்னான் மாகாணத்தின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக பொருளாதார உறவுகளுக்கான தலைவர் ஜிங்லீ  ஹன் தலைமை தாங்கினார்.

இந்தப் பேச்சுக்களை அடுத்து, இறப்பர் வலயத்தை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இந்த மாத இறுதியில் சீனாவில் கையெழுத்திடப்படவுள்ளது. இதில் அமைச்சர் நவீன் திசநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.

ஒரு கருத்து “சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா”

  1. Cheran Rudhramoorthy
    Cheran Rudhramoorthy says:

    நல்லது. சிறப்பாக இறப்போர் வலயம் அங்கு தேவை. இதுவரை இறந்தோர்க்கும், கொலையுண்டோர்க்கும் அவல இறப்புத்தானே!

Leave a Reply to Cheran Rudhramoorthy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *