மேலும்

ஆண்டு: 2018

கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வெளிநாட்டு குடியுரிமையை கைவிட முடிவு?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வெளிநாட்டுக் குடியுரிமையை விரைவில் கைவிடவுள்ளனர் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஏன் போராடுகிறது கூட்டமைப்பு?

நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

காசோலை மோசடி – மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் கைது

காசோலை மோசடி குற்றச்சாட்டில், மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் குற்ற விசாரணைத் திணைக்கள காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாந்தையில் சீன குழுவினர் அகழ்வாய்வு

மன்னார் மற்றும் மாந்தை துறைமுகங்கள் ஊடாக சிறிலங்காவுடன் சீனர்கள் மேற்கொண்ட பண்டைய வணிகம் தொடர்பாக, சீன மற்றும் சிறிலங்கா தொல்பொருள் ஆய்வாளர்கள் கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

வடக்கில் வெள்ளத்தினால் 74 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 74 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மைத்திரிக்கு வேட்டு வைக்கும் மொட்டு கட்சி

எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

50 நாள் ஆட்சியில் சீரழித்து விட்டார் மகிந்த – சஜித்

50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, பிரதமராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்களின் பொறுப்புகள் – அரசிதழ் அறிவிப்பு தாமதம்

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கான அமைச்சுக்கள், பொறுப்புகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரின் பதவிகளை பறிப்போம் – மகிந்த அணி சூளுரை

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்துள்ளது.