மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  சற்று முன்னர்,  46  வாக்குகளால் தோல்வியடைந்தது.

இன்று காலை 9 மணி தொடக்கம், நம்பிக்கையில்லா பிரேரணை  மீது  நடத்தப்பட்ட விவாதத்தை அடுத்து, இரவு 9.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன.  26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் எதிர்த்து வாக்களித்தனர். ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஆதரித்து வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச எதிர்த்து வாக்களித்தார்.

ஒரு கருத்து “நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி”

  1. Chenavi L says:

    ஆதரவு 76 எதிர்ப்பு 122 என நினைக்கிறேன்.

Leave a Reply to Chenavi L Cancel reply

Your email address will not be published. Required fields are marked *