மேலும்

நாள்: 27th November 2014

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

மகிந்தவுக்கு கைகொடுக்கிறது பொது பல சேனா

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.

இன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் நெஞ்சில் ஏந்துவோம்

கனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை? முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.

யாழ்.படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் – “வெள்ளைவான் கடத்தல் சூத்திரதாரி”

யாழ்ப்பாண படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று அவசரமாக கொழும்புத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண ஆலயங்களில் மணி ஒலிக்க, தீபம் ஏற்ற சிறிலங்கா படையினரால் தடை

உலகெங்கும் இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சிறிலங்கா படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் அழைத்தார் மகிந்த – வாக்குறுதி வழங்காமல் நழுவினார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை

சிறிலங்காவுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீன நீர்மூழ்கி விவகாரம் – மௌனத்தை உடைத்தார் சுஸ்மா சுவராஜ்

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தச் செயலிலும் தாம் ஈடுபடமாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை மீட்க முயன்றது அமெரிக்கா – சிறிலங்கா குற்றச்சாட்டு

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மாவீரர் நாளை அனுஸ்டிக்க விடமாட்டோம் – பிரிகேடியர் ருவான் வணிகசூரிய

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கோ, சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.